News August 15, 2024
கடன் பிரச்னைகளை தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு

சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, மனமுருகி வேண்டுங்கள். பிறகு அவரை 12 முறை வலம் வந்து வழிபடுங்கள். துளசி தளம் சாத்தி வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் கடனால் உண்டான சங்கடங்கள் நீங்கும். அதே போல தோரண கணபதியை அன்றாடம் விளக்கேற்றி வழிபடுங்கள். சதுர்த்தி நாள்களில் நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுங்கள். நிச்சயம் கடன் தீரும்.
Similar News
News December 24, 2025
இந்தியர்களின் ‘On site’ கனவுக்கு சிக்கல்

H1B விசா நடைமுறையில் பல தசாப்தங்களாக பின்பற்றி வந்த குலுக்கல் முறையை USA ரத்து செய்துள்ளது. அதிக சம்பளம் வாங்குவோர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் H1B விசா பெறுபவர்களில் 70% இந்தியர்களே; பிப்.27, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம், குலுக்கல் முறையை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான நடுத்தர ஊழியர்களின் கனவை சிதைத்துள்ளது.

திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

நமது மக்கள் முன்னேற்றக் கழகம்(நமமுக) திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. ஸ்டாலினை நேரில் சந்தித்த அக்கட்சியின் நிறுவனர் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் 2026 தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவதாக உறுதி அளித்தனர். அக்கூட்டணியில் ஏற்கெனவே காங்., விசிக, மதிமுக, இடதுசாரிகள், IUML, மநீம உள்ளிட்ட 16 கட்சிகள் உள்ள நிலையில், நமமுகவும் இணைந்தது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. உங்க கருத்து?