News August 15, 2024
தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.1000 ஒதுக்கீடு

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில் திட்டங்களுக்கு தலா ரூ.1000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் பலகோடி ரூபாய் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பலவற்றிற்கு, தற்போது ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை – மகாபலிபுரம் – கடலூர் இடையே 179 கி.மீ கடற்கரை பாதைக்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது, தற்போது ரூ.1000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
BREAKING: மீண்டும் கூட்டணியில் OPS, TTV?

NDA கூட்டணியில் OPS, TTV, சசிகலா இணைவார்களா என்ற கேள்விக்கு EPS நேரடியாக பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பெரிய கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பான ஒன்றுதான்; கூட்டணி, உள்கட்சி விவகாரம் குறித்து நாங்கள் பேசி முடிவு எடுத்துக்கொள்வோம் என்று நேரடியாக இல்லாமல் சூசகமாக பதிலளித்தார். இதனால், OPS, TTV மீண்டும் கூட்டணியில் இணைய வாய்ப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 18, 2025
சீன மாஸ்டர்ஸ்: காலிறுதியில் பி.வி.சிந்து

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். 6-ம் நிலையில் உள்ள தாய்லாந்தின் போர்ன்பாவி சோச்சுவாங்கை எதிர்கொண்ட அவர், 21 – 15, 21 -15 என்ற கணக்கில் வெற்றியடைந்தார். சமீபகாலமாக பெரிய வெற்றியை பெறாமல் உள்ள சிந்து, இந்த தொடரில் தடம் பதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் போராடி வருகிறார்.
News September 18, 2025
இவர்களுக்கு ₹1000 மகளிர் உரிமை தொகை கிடைக்காது

மகளிர் உரிமை தொகை குறித்த அறிவிப்பு செப்.15-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு, எதுவும் வெளியாகாததால் பெண்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், தகுதியில்லாதவர்களுக்கு ₹1000 கிடையாது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தகுதி இல்லாமல் அரசு பணத்தை அனைவருக்கும் எடுத்துகொடுக்க முடியாது எனக் கூறிய அவர், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட தகுதியான மனுக்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்றார்.