News August 15, 2024
திருப்பூரில் பலத்த பாதுகாப்பு

திருப்பூரில் சுதந்திர தின விழாவையொட்டி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள் தலைமையில் 3 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் என மாநகர் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News October 22, 2025
இரவு நேர காவலர்களின் ரோந்து விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (22.10.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News October 22, 2025
திருப்பூர் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கடந்து சில தினங்களாக மழை பெய்து வரக்கூடிய நிலையில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மணிஷ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News October 22, 2025
திருப்பூர்: பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!

பீகார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார். இவர் திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் தங்கி, பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று கரைப்புதூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்து சாக்கடையில் விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஆகாஷ் குமார் உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.