News August 15, 2024
நாளை தேசிய கொடியை ஏற்றுகிறார் முதல் பெண் மேயர்

புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயர் திலகவதி செந்தில் நாளை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு தேசிய கொடியை ஏற்றி சிறப்பிக்க இருக்கிறார். நாடு முழுவதும் நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மன்னர் ஆண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் பெண் மேயராக பதவி ஏற்றுள்ள திலகவதி செந்தில் நாளை கொடி ஏற்றுகிறார்.
Similar News
News August 21, 2025
முதன்மை கல்வி அலுவலகத்தில் உயர்வுக்கு படி முகாம்

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நாளை (ஆக.22) உயர்வுக்கு படி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகமானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் இம்முகாமில் கல்விக் கடன் கல்லூரி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற பயன்களை பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News August 21, 2025
புதுகை அருங்காட்சியகத்தில் புதிர்ப்போட்டி

புதுகை அருங்காட்சியகம் சார்பில் ‘அறிவோம் அருங்காட்சியகம்’ என்ற தலைப்பில் வரும் ஆக.21, 22ம் தேதிகளில் அருங்காட்சியகம் வரும் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருங்காட்சியகம் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். வரும் ஆக.23 அன்று சரியான விடை எழுதியோரில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News August 21, 2025
புதுகை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <