News August 14, 2024

ஊராட்சி கூட்டமைப்புகளின் ஆண்டு பொதுக் குழுக்கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் ஆண்டு பொதுக் குழுக்கூட்டம் (Annual General Body Meeting) வரும் 15.08.2024 அன்று நடைபெறவுள்ளது. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News November 9, 2025

கிருஷ்ணகிரி: இரவு காவலர் ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ. 08) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 8, 2025

கிருஷ்ணகிரி பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள்<> இங்கு<<>> க்ளிக் செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

கிருஷ்ணகிரி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

10, +2 மதிப்பெண் சான்றிதழ், ஏதேனும், அரசு ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியதில்லை. இனி ஈசியாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அரசின் epettagam.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று, உங்களின் ஆதார் எண்ணைக் கொடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை கொடுத்து உங்களின் ஆவணங்களை அனைத்தும் உடனே பதிவு செய்து கொள்ளலாம் . SHARE செய்யவும்.

error: Content is protected !!