News August 14, 2024

குமரி மாவட்ட சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் முதல்வர் விருதுக்கு தேர்வு

image

சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் விருதுக்கு குமரி மாவட்ட பெண் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பார்வதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் இந்த விருது வழங்கப்படுகிறது. இவர்
கடந்த 2004ஆம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 8, 2025

குமரி: லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

image

திருவட்டார் அருகே தேமானூர் பகுதியில் அருமனையில் இருந்து ஆற்றூர் நோக்கி நேற்று இரவு ரப்பர் கட்டன்ஸ் ஏற்றி வந்த லாரி ஆற்றூரில் இருந்து தேமானூர் நோக்கி வந்த பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் பைக்கில் வந்தவர் பலியானார். பைக்கில் வந்தவர் சிதறாமல் பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (36) என தெரியவந்தது. இது குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 8, 2025

குமரியில் 39 பேருக்கு போக்சோ தண்டனை

image

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர். ஸ்டாலின் பதவி ஏற்றத்திலிருந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 39 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

News November 7, 2025

குமரி மாவட்டத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சாதனை

image

குமரி மாவட்டத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் திலீபன் என்பவர் சென்னையில் நடைபெறும் 23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு தென் கொரியா நாட்டில் நடைபெறும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். மாவட்ட எஸ். பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!