News August 14, 2024
விமான கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, கோவை செல்லும் விமானங்களில் டெலிட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – சேலம் விமான கட்டணம் ரூ.2715 ஆக இருந்த நிலையில் இன்றும் நாளையும் ரூ.8,277 ஆக உயர்ந்துள்ளது. விமானம் கட்டணம் உயர்ந்துள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Similar News
News July 6, 2025
சேலம் ஜூலை 6 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஜூலை 6 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 9 மணி மாநில அளவிலான தேக்ஹோண்டா போட்டிகள் (பனங்காடு)▶️ காலை 10 மணி சேலம் மாவட்ட குற்றவியல் வழக்குறைஞ்ஞர்கள் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் (மாநகராட்சி தொங்கும் பூங்கா) ▶️காலை 10 மணி ஆதி தமிழர் பேரவையின் சார்பில் அருந்ததியர் சமூகம் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் விழா (திருவாகவுண்டனூர்)
News July 6, 2025
பெண்களை செல்போனில் படம் பிடித்தவருக்கு தர்மஅடி

சேலம், தாதகாப்பட்டி உழவர் சந்தையில் நேற்று காலை காய்கறிகள் வாங்க வந்த பெண்களை, சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செல்போனில் ரகசியமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார், அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 6, 2025
2-வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2-வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 53,027 கனஅடியில் இருந்து 51,401 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 40,000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.