News August 14, 2024

ரயில் நிலைய பராமரிப்பு காரணமாக கூடுதல் பேருந்துகள்

image

தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் 18-ம் தேதி வரை கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பல்லாவரம் முதல் செங்கல்பட்டு வரை 30 பேருந்துகளும், பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரை 20 பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து பிராட்வே மற்றும் தியாகராய நகர் வழித்தடத்தில் கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 5, 2025

சென்னை ரேஷன் அட்டைதாரர்களே…

image

சென்னையில், புதிய ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு (ஸ்மார்ட் கார்டுக்கு) விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. இந்த <>லிங்கில் <<>>சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17309359>>தொடர்ச்சி<<>>

News August 5, 2025

சென்னை ரேஷன் அட்டைதாரர்களே…

image

விண்ணப்பித்த ரேஷன் கார்டு (ஸ்மார்ட்கார்டு ) கிடைக்கவில்லை என்றாலோ அல்லது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் அந்த <>இணையதளத்திலேயே <<>>புகார் அளிக்கலாம். உங்கள் பெயர், மொபைல் எண், இ-மெயில் முகவரியை உள்ளிட வேண்டும். வகைப்பாடு என்னும் இடத்தில ‘மின்னணு அட்டை கிடைக்க பெறவில்லை’ என்பதை தேர்வு செய்து உங்கள் புகாரை அனுப்பவும். வீட்டில் இருந்தபடியே செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

1 மணி நேரத்தில் சென்னை To வேலூர் செல்லலாம்

image

சென்னையிலிருந்து 140 கி.மீ. தூரத்தில் உள்ள வேலூருக்கு காஞ்சிபுரம் வழியாக RRTS ரயில் சேவையை கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளது. இது மெட்ரோ ரயிலைவிட 3 மடங்கு வேகம் கொண்டது. பாலாஜி ரயில் ரோடு என்ற நிறுவனம் அதற்கான சாத்தியக்கூறுகளை தயாரித்து வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் சென்னை – காஞ்சிபுரம் 25 நிமிடத்திலும், சென்னை – வேலூர் 1 மணி நேரத்திலும் சென்றடைய முடியும். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!