News August 14, 2024
அரியலூர் வாட்ஸ்அப் மூலம் மோசடி

அரியலூர் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை வைத்து முகம் தெரியாத நபர்களிடமிருந்து +94785154768 என்ற எண்ணிலிருந்து வாட்ஸ்அப் கால், வாட்ஸ்அப் மெசேஜை மூலமாக அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது. இவ்வாறான அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம்.
மேலும் இவ்வாறான அழைப்புகள் வந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கோ, காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
அரியலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்றைய (ஆக.20) ரோந்துப் பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
அரியலூர் மக்களே உஷார்.!

அரியலூர் மக்களே..வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இப்படியாக வரும் அழைப்புகள் மூலம் உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது போன்று பலர் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இது போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக இந்த 1930 எண்ணுக்கு அழைத்து புகாரளியுங்கள். இதனை SHARE பண்ணுங்க!
News August 20, 2025
கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – எச்சரிக்கை

கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, மேட்டூரிலிருந்து காவிரியாற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.