News August 14, 2024
கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
Similar News
News August 21, 2025
புதுக்கோட்டை: தமிழக காவல்துறையில் வேலை

புதுக்கோட்டை மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<
News August 21, 2025
முதன்மை கல்வி அலுவலகத்தில் உயர்வுக்கு படி முகாம்

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நாளை (ஆக.22) உயர்வுக்கு படி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகமானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் இம்முகாமில் கல்விக் கடன் கல்லூரி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற பயன்களை பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News August 21, 2025
புதுகை அருங்காட்சியகத்தில் புதிர்ப்போட்டி

புதுகை அருங்காட்சியகம் சார்பில் ‘அறிவோம் அருங்காட்சியகம்’ என்ற தலைப்பில் வரும் ஆக.21, 22ம் தேதிகளில் அருங்காட்சியகம் வரும் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருங்காட்சியகம் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். வரும் ஆக.23 அன்று சரியான விடை எழுதியோரில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.