News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

Similar News

News February 8, 2026

நீலகிரி: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு<> க்ளிக் <<>>செய்து Grievance Redressal, நீலகிரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News February 8, 2026

நீலகிரி: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 8, 2026

பந்தலூர் அருகே பெண் கொடூர கொலை: 3வது கணவருக்கு தீர்ப்பு!

image

பந்தலூர் எருமாடு அருகே வெட்டுவாடி மடமூலா ஆதிவாசி காலனி பகுதியை சேர்ந்தவர் யசோதா(52). இவரின் 3-வது கணவர் சந்திரன்(36). இவர்கள் ஆதிவாசி காலனி பகுதியில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தனர். சம்பளப் பணம் தொடர்பான தகராறில், யசோதாவை கல்லால் அடித்து சந்திரன் கொலை செய்துள்ளார். 2025-ல் நடந்த இக்கொலை வழக்கை விசாரித்த ஊட்டி நீதிமன்றம் ஆயுள் தண்டனை (ம) ரூ.2,000 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

error: Content is protected !!