News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News October 14, 2025
கரூரில் சலவையகம் அமைக்க 5 லட்சம் நிதியுதவி!

கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன ஆண் / பெண் மக்களில் 05 நபர்களை கொண்டு குழுவாக அமைத்து நவீன சலவையகம் அமைக்க ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News October 14, 2025
கரூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

கரூர் மாவட்டம் கடவூர், குருணி குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லுசாமி மகன் சங்கப் பிள்ளை 54. இவர் அப்பகுதியில் உள்ள தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணிப்பட்டி போலீசார் லாட்டரி சீட்டு விற்ற சங்கப்பிள்ளை மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.
News October 14, 2025
கரூர்: இலவசமாக கடைகள் நடத்திக் கொள்ளலாம்

கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜவகர் பஜார் பகுதியைத் தவிர பிற பகுதிகளில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறு குறு வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் சுங்க கட்டணம் இல்லாமல் தற்காலிக தரைக்கடைகள் அமைக்க மாமன்ற அவசரக்கூட்ட தீர்மானம் 2743 தீர்மானிக்கப்பட்டுள்ளது.