News August 14, 2024
கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT
Similar News
News November 4, 2025
திருச்சி: கார் மோதி பரிதாப பலி

காணகிளியநல்லூர் அடுத்த குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (47). கார் டிரைவரான இவர் நேற்று முன்தினம் தச்சன்குறிச்சியிலிருந்து குமுளூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நாகேந்திரன் என்பவர் ஓட்டி வந்த கார் ராஜேந்திரன் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட.நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார்.
News November 4, 2025
திருச்சி: மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலை

முசிறி அருகே வெள்ளூரைச் சேர்ந்தவர் குணசேகரன் (60). இவரது மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன் காலமானார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த குணசேகரன் கடந்த அக்.28-ம் தேதி துக்கம் தாங்காமல் விஷம் அருந்தியும், கழுத்தை அறுத்து கொண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து முசிறி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 4, 2025
திருச்சி: முக்கிய சாலை மூடல்

உறையூர் முதல் குடமுருட்டி கோணக்கரை கரூர் புறவழிச்சாலை வரை, உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரைப் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கோணக்கரை சாலை பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக கோணக்கரை மயானம் முதல் குடமுருட்டி சாலை வரை நாளை முதல் (நவ.5) தற்காலிகமாக மூடப்படுவதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிவித்துள்ளார். SHARE NOW!


