News August 14, 2024
கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
Similar News
News August 19, 2025
தென்காசி வழி செல்லும் ரயில்களின் விவரம்

ஏர்னாக்குளம் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் (06015)
வேளாங்கண்ணி ஏர்னாக்குளம் எக்ஸ்பிரஸ் (06016)
சிலம்பு எக்ஸ்பிரஸ் (16181)
சிலம்பு எக்ஸ்பிரஸ் (16182)
தாம்பரம் திருநெல்வேலி சுவிதா (82615)
திருநெல்வேலி டவுன் சிறப்பு (06072)
தாம்பரம் திருநெல்வேலி சுவிதா (82625)
திருநெல்வேலி பாலக்காடு ஜங்ஷன் சிறப்பு (06791)
பாலக்காடு ஜங்ஷன் திருநெல்வேலி சிறப்பு (06792)
செங்கோட்டை மதுரை ஜங்ஷன் எக்ஸ்பிரஸ்(02662)
*ஷேர் பண்ணுங்க
News August 19, 2025
நாளை செங்கோட்டை பள்ளியில் மருத்துவ முகாம்

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சக்தி மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
News August 19, 2025
தென்காசி மாவட்டத்தில் மின் சேவை எண் அறிவிப்பு

தென்காசியில் மழை நேரங்களில், மின்கம்பங்கள், மின்சாதனங்கள் அருகிலேயே அல்லது கிழே நிற்க வேண்டாம். மின்சாரம் சம்பந்தமாக அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL OFFICIAL APP) திருநெல்வேலி மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.