News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

Similar News

News October 31, 2025

திருப்பூரில் நாளை மின்தடை: உங்க ஏரியா இருக்கா?

image

அவினாசி ,வீரபாண்டி மற்றும் ஆண்டிப்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை, திருப்பூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவினாசி செயற்பொறியாளர் பரஞ்ஜோதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

News October 31, 2025

திருப்பூர் திடீர் போக்குவரத்து மாற்றம்!

image

திருப்பூர் நொய்யல் ஆற்றுப் பூங்கா சாலை சந்திப்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக, நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள்: சாய்பாபா கோவில் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள்: கிரிஸ்டல் சந்திப்பு, நடராஜ் தியேட்டர் வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளன. இது குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை 94981-81078 அழைக்கவும் என காவல்துறை அறிவித்துள்ளது.

News October 31, 2025

திருப்பூரில் வேலை தேடுவோர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை 31ஆம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பல்வேறு முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்வதால் 10 வகுப்பு, ஐடிஐ ,பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!