News August 14, 2024
கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
Similar News
News August 18, 2025
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை வருகை!

கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ் நேற்று இரவு விடுத்த அறிக்கையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (திங்கள்) காலை 11 மணியளவில் கோவை வருகிறார். அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின், அங்கிருந்து அவர் சூலூர் செல்கிறார். அங்குள்ள அண்ணா சீரணி அரங்கத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
News August 18, 2025
கோவை: டிகிரி போதும்.. LIC-யில் வேலை!

கோவை மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 18, 2025
கோவையில் பலே மோசடி: போலீசார் எச்சரிக்கை!

கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாக ஒரு கும்பல், மாணவர்களின் செல்போனுக்கு QR CODE அனுப்பி ஸ்கேன் செய்ய அறிவுறுத்துகின்றனர். அதை ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கிலிருந்து மொத்த பணமும் மோசடி செய்யப்படும். எனவே மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு 1930 தொடர்பு கொள்ளலாம். SHARE IT