News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News October 22, 2025
JUST IN மதுரை: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 22, 2025
மதுரையில் பட்டாசு வெடித்த 35 பேர் மீது வழக்கு

மதுரையில் தீபாவளி அன்று ஒலி எழுப்பும் பட்டாசு வெடிக்க மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால் பல இடங்களில் விதிமீறியும் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடித்ததாக போலீசாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் ஐராவதநல்லூர் தெப்பக்குளம் நரிமேடு தல்லாகுளம் மண்மலைமேடு மெயின் ரோட்டு உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்ததாக 20 பேரும், மதுரை மாவட்டத்தில் பேரையூர் உள்பட 15க்கு மேற்பட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
News October 22, 2025
மதுரை: பட்டாசு விபத்து மருத்துவமனையில் 25 பேர் அனுமதி

மதுரை தீபாவளி அன்று காலை 7:00 மணி முதல் நேற்று (அக். 21) காலை 7 மணி வரை பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்த ஒரு பெண் உள்பட 30 க்கு மேற்பட்டோர், மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்தனர் இவர்களில் 25 பேர் தீவிர சிகிச்சை பிரிவு அறுவை சிகிச்சை தீக்காய பிரிவுகள் சிகிச்சை பெறுகின்றனர். ஒரு சிறுவனுக்கு விரல் நுனி துண்டாகி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, மூன்று பேர் கண் மருத்துவ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.