News August 14, 2024
‘விந்து தானம் செய்பவர்களுக்கு இந்த உரிமை கிடையாது’

மும்பையைச்சேர்ந்த பெண்ணுக்கு குழந்தை இல்லாததால், அவரது தங்கை கருமுட்டை தானம் செய்து, வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அவரது கணவரோ தனது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், விந்து, கருமுட்டை தானம் செய்வோருக்கு குழந்தை மீது உரிமை இல்லை என்றும், மனைவிக்குதான் உரிமை இருப்பதாகவும் தெரிவித்தது.
Similar News
News October 21, 2025
தீபாவளி: டாஸ்மாக் வசூல் இவ்வளவு கோடியா!

தீபாவளி விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், மது விற்பனை குறித்த விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ₹789 கோடி வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அக்.18, 19, 20 ஆகிய 3 நாள்களில் மட்டும் வசூலாகி இருப்பதாக டாஸ்மாக் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் விடுமுறை என்பதால் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News October 21, 2025
போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: EPS

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு <<18061217>>மழை<<>> எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு EPS வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களும் IMD அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 21, 2025
தியேட்டரில் மீண்டும் கான்ட்ராக்டர் நேசமணி!

2001-ல் வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ படம் அதிரிபுதிரி வெற்றியடைந்தது. விஜய்- சூர்யாவின் அசத்தலான நடிப்பு, துள்ளலான பாடல்கள், நண்பர்களை சுற்றி நிகழும் சூப்பரான திரைக்கதை ஆகியவற்றுடன், வடிவேலு காமெடி கலாட்டாவை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி தீர்த்தனர். இந்த படம் வரும் நவம்பர் 21-ம் தேதி ரீரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கான்ட்ராக்டர் நேசமணி காமெடியை தியேட்டரில் ரசிக்க ரெடியா?