News August 14, 2024
குமரியில் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி

தமிழ் வளர்ச்சித் துறையில் ஆண்டுதோறும் 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறிக் குழு உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டு பரிசுக்குப் பரிந்துரைசெய்யப்படுவர் என ஆட்சியர் அழகுமீனா நேற்று(ஆக.,13) தெரிவித்துள்ளார்.
Similar News
News May 7, 2025
குமரி மாவட்டத்தில் 1522 கேமராக்கள் நிறுவ முடிவு

குமரி மாவட்டத்தில் ஊர் காவல் கண்காணிப்புத் திட்டத்தை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் படி ஒரு கிராமத்தில் ஒரு காவலர் பணியமர்த்தப்பட்டு இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 761 கிராமங்களில் 1522 கேமராக்கள் பொருத்துவதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.
News May 7, 2025
சட்டப் பணிகள் குழுவில் பணிபுரிய தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் குழித்துறை பத்மநாபபுரம் இரணியல் பூதப்பாண்டி ஆகியவற்றில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தொண்டு புரிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இதர சமூக சேவை எண்ணம் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆணை குழு செயலாளர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.
News May 7, 2025
குமரி மக்களுக்கு தேவையான எண்கள்

காவல் துறை கண்காணிப்பாளர் -4652220047
வனத்துறை அலுவலர் -4652276205
வருவாய் அலுவலர் -4652278725
சார் நிலை ஆட்சியர் -4651250722
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் -4652236729
ஆதி திராவிட நலத்துறை அலுவலர் -4652232023
மண்டல மேலாளர், நுகர்பொருள் வாணிப கழகம் -4652260224
மேற்பார்வை பொறியாளர், மின்சார வாரியம் -4652230011
துணை இயக்குனர், விவசாயம் -4652275391
கோட்டாட்சியர் , நாகர்கோவில் -4652279833 *ஷேர்