News August 14, 2024
திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகள் நன்றி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் சாய்தளம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தோட்டக்கலைத்துறை சார்பாக சாய்வு தளம் அமைத்தனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி சென்று வர எளிதாக சாய்வு தளம் அமைத்துக் கொடுத்த அதிகாரிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் இன்று நன்றி தெரிவித்தனர்
Similar News
News August 6, 2025
திண்டுக்கல்லில் கூட்டுறவு வங்கி வேலை.. ரூ.96,395 சம்பளம்!

திண்டுக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள 32 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ. 96,395 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 6, 2025
பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தொடர்பாக வாலிபர் கைது

பழனி பெருமாள் புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி காளீஸ்வரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவருக்கும் நில பிரச்சினை காரணமாக நிர்மல்குமார், விவசாயி காளீஸ்வரன் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கிடுகு கூரை மீது தீ வைத்தது தொடர்பாக மாவட்ட S.P.உத்தரவின் பேரில் பழனி தாலுகா காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நிர்மல்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
News August 6, 2025
வத்தலகுண்டு: 11 வயது சிறுமி பரிதாப பலி

திண்டுக்கல்: வத்தலகுண்டு, சித்தரேவுவில் பீரோவில் புத்தகம் எடுக்க முயன்ற 11 வயது நந்தனாதேவி, தவறி கயிற்றில் விழுந்ததால் கழுத்தில் கயிறு சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.