News August 14, 2024
‘வரியை குறைக்க ஆசைதான்; ஆனால் முடியலையே’

வரியை குறைக்கவே தான் விரும்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், நம் நாடு ஏராளமான சவால்களை சந்தித்து வருகிறது. அதனை சமாளிக்க அதிக பணம் தேவைப்படுகிறது. இதை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். எனக்கும் வரியை குறைக்க ஆசை தான். ஆனால் முடியவில்லை. எனது வேலை வருமானத்தை அதிகரிப்பதுதான். மக்களை கஷ்டப்படுத்துவது அல்ல எனக் கூறினார்.
Similar News
News August 15, 2025
சீனாவுடன் எல்லை வழி வர்த்தகத்தை தொடங்க முடிவு

5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சீனா உடனான எல்லை வழி வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா முடிவு செய்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் எல்லை வழியாக வர்த்தகத்தை தொடங்க சீன தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 கல்வான் மோதலுக்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை வழி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.
News August 15, 2025
ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் காலமானார்

இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸின் தந்தை வெஸ் பயஸ் (80) காலமானார். இவர், 1972 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றவர் ஆவார். உடல்நலக் குறைவு & வயது மூப்பு காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் வீரேன் ரஷ்குயின்ஹா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News August 14, 2025
ரெஸ்ட் எடுங்க பாஸ்…ஆனால் இப்படி எடுக்காதீங்க!

ஓய்வு நேரம் குறைந்தால், அதிக அளவு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் ஓஹியோ பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைவாக ஓய்வு கொண்டவர்கள் குறைந்த அளவிலேயே மகிழ்ச்சியை அனுபவித்து வருகின்றனர் என கூறும் அந்த ஆய்வு, அளவுக்கு அதிகமாக ஓய்வு எடுப்பது உடல்/மன நலனை பாதிக்கும் என்கிறது. மிக அதிக ஓய்வு பிபி, மன அழுத்தம், துக்கமின்மை, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.