News August 14, 2024
சென்னை கழிவுநீர் அகற்று வாரியம் புகார் எண் அறிவிப்பு

மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் பொதுமக்கள் உடனடியாக கட்டணமில்லா தேசிய உதவி எண் 14420-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தெரிவித்துள்ளது. கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் விஷவாயுக்கள் மனித உயிர்களை பாதிக்காமல் இருக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் நேற்று (23.10.25) இரவு 11 மணி முதல் இன்று காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News October 23, 2025
’நாங்கள் மழைக்கு தயார்!’ – மேயர் பிரியா

சென்னையில் கடந்த 2 நாட்களில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய மாநகராட்சி மேயர் பிரியா, ’அதிக மழைக்கு தயாராக இருக்கிறோம். இராயபுரம் மண்டலத்தில் 9 மீட்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 5 சுரங்க பாதைகள் சீரமைக்கப்பட்டு, மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1.50 லட்சம் பேருக்கு காலை உணவும், 2.30 லட்சம் பேருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
News October 23, 2025
தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு!

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு உணவு வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 3 வேளையும் இலவச உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.