News August 14, 2024
‘GOAT’ கதையை சொன்ன வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘GOAT’ திரைப்படம் செப்.5ல் வெளியாகிறது. படத்தின் கதை குறித்து மெளனம் கலைத்த வெங்கட் பிரபு, கற்பனைக் கதை என்றாலும், நிஜத்திற்கு நெருக்கமாக எடுக்க முயற்சித்துள்ளதாக கூறினார். RAW அமைப்போடு இணைந்து பணியாற்றிய Special Anti Terrorists Squad குரூப் ஒன்று, ஒரு பிரச்னையில் சிக்குகிறது. அதை அவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதே கதை என்றார். எப்படி இருக்கு கதை?
Similar News
News November 14, 2025
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியுள்ளது. பிஹார் சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 67.13% வாக்குகள் பதிவாகியிருந்தன. குறிப்பாக, ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்குகள் செலுத்தியுள்ளனர். மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 2,616 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
News November 14, 2025
இன்று அனைத்து பள்ளிகளிலும்

TN-ல் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று (நவ.14) குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. நேருவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவ.14-ஐ மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களே ரெடியா..!
News November 14, 2025
தவெக உடன் கூட்டணியா? குழு அமைத்த காங்கிரஸ்

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பதை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அடங்கிய குழு, இன்னும் 2 வாரங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்து செய்திகள் வெளியான நிலையில், தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது.


