News August 14, 2024

தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஆக.,14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.

Similar News

News August 20, 2025

தென்காசி: வங்கியில் ரூ.64,480 சம்பளத்தில் வேலை

image

தென்காசி மக்களே; ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 Clerk காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2025. தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.24,050 – ரூ.64480/- வரை சம்பளம் வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

கடையநல்லூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

image

கடையநல்லூரில் முகமது அலி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. முகமது அலி வெளிநாட்டில் இருப்பதாக தகவல். ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சோதனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News August 20, 2025

தென்காசி மாவட்டத்தில் 5 கல்குவாரிகள் விதிமீறல்

image

தென்காசி மாவட்டத்தில் சில கல்குவாரிகள் விதி மீறலில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர் ஜமீன் தொடுத்திருந்த வழக்கிற்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் இருந்து எட்டு கல்குவாரிகள் விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 கல்குவாரிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும் இரண்டு கல்குவாரியிலிருந்து அபராத தொகை பெற்றுள்ளதாகவும் மீதமுள்ள கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!