News August 14, 2024

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு

image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி அருகே, மாயத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று(ஆக.,14) காலை சுமார் 10 மணி அளவில் அந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர். காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Similar News

News February 23, 2026

விருதுநகர்: சிலிண்டர் புக் பண்ண இனி MISSED CALL…!

image

விருதுநகர் மக்களே, (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.

Bharatgas: 77150 12345

HP: 94936 02222

Indane:84549 55555

இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போது கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

News February 23, 2026

விருதுநகர்: 50 நாட்களில் 10 கொலை சம்பவம்

image

விருதுநகர் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொலை சம்பவம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக சிவகாசி உட்கோட்டத்தில் மட்டும் 6 கொலைகள் நடைபெற்றுள்ளது. மேலும் விருதுநகர், ஸ்ரீவி, சாத்தூர், ஆவியூர் ஆகிய பகுதிகளிலும் தலா 1 கொலைகள் என கடந்த 50 நாட்களில் 10 கொலை சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News February 23, 2026

சிவகாசியில் கட்டையால் தாக்கி ஒருவர் கொலை

image

சிவகாசி அருகே பி.பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராமர் (35). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ராமரை அவரது மனைவியுடன் சேர்ந்து வாழும் படி அவரது தம்பி சபரிராஜன் தகராறு செய்துள்ளார். அபோது ஆத்திரமடைந்த ராமர் கட்டையால் சபரி ராஜனை தாக்கியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!