News August 14, 2024
ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக

சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. அக்கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் கலந்துகொள்வர் என்று தெரிவித்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இவ்விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால், திமுகவின் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
Similar News
News October 18, 2025
TN-ல் 5 ஆண்டுகளில் 6,862 கொலைகள்!

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 6,862 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. காவல்துறை தகவலின்படி, தகாத உறவு(650), காதல்(362), குடும்பத் தகராறு(2,238) சம்பவங்களே அதிகம். சாதி & மத தகராறுகளில் 31 கொலைகள் நிகழ்ந்துள்ளன. அரசியலுக்காக 7 கொலைகள் நடந்துள்ளன. மேலும், காரணம் தெரியாமல் 173 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால் குடிபோதைக்கு 663 கொலைகள் நிகழ்ந்துள்ளன.
News October 18, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைகிறது

உலக சந்தையில் ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை திடீரென சரிவைக் கண்டுள்ளது. 1 அவுன்ஸ் (28 கிராம்) 40 டாலர்கள்(₹3,518) குறைந்துள்ளது. கடந்த 30 நாள்களில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கம் இந்திய மதிப்பில் ₹56,727 அதிகரித்த நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு சற்று சரிந்துள்ளது. நேற்று பங்குச்சந்தைகள் உயர்வு, USA சந்தையில் தங்கம் விலை சரிவு, இந்தியச் சந்தைகளிலும் இன்று எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.
News October 18, 2025
பிஹார் தேர்தலில் சறுக்கும் பாஜக.. பின்னணி என்ன?

பிஹாரில் காங்., கூட்டணியின் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிக்கப்பட்டுள்ளார். NDA-வில் CM யார் என்பதை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்வோம் என அமித்ஷா கூறியுள்ளார். தேர்தல் பிரசார கூட்டங்களில் இவ்விவகாரத்தை கையில் எடுத்து RJD, காங்., தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பாஜகவின் பிடியில் நிதிஷ் சிக்கியுள்ளதாகவும், அவருக்கு மரியாதை இல்லை எனவும் RJD சாடியுள்ளது. இது NDA-வுக்கு சற்று சறுக்கலாக பார்க்கப்படுகிறது.