News August 14, 2024
ஆக.16ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆக.16ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனர். மேலும் விபரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 04546-254510, 94990 55936 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News November 9, 2025
தேனியில் பரவும் குண்டு காய்ச்சல்

தேனி மாவட்டத்தில் தற்போது குளிர் காலம் தொடங்குவதால், சில பசுக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கால்நடை துறையினர் கூறுகையில், இந்த வகை காய்ச்சல் கொசு மற்றும் ஒரு வித பூச்சி கடியால் ஏற்படுகிறது. கால்களில் குழம்புகளில் முன்னும் பின்னும் குண்டு போன்று ஏற்படும். எனவே இதை குண்டு காய்ச்சல் என்றும் அழைக்கின்றனர். இது 3 நாட்களில் சரியாகி விடும் அச்சம் தேவையில்லை என தெரிவித்தனர்.
News November 9, 2025
தேனி: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

தேனி மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News November 9, 2025
தேனி: இந்த தேதிகளில் கனமழை

தேனி மக்களே, மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தேனியில் வருகிற 12, 13ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


