News August 14, 2024
ஹஜ் யாத்திரை விண்ணப்பப்பதிவு தொடக்கம்

அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோருக்கு விண்ணப்பப்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இதற்கு செப்.9 வரை விண்ணப்பிக்கலாம். முதல்முறையாக இந்தாண்டில் https://hajcommittee.gov.in/ இணையதளத்துடன் சேர்த்து, HAJ Suvidha APP என்ற பிரத்யேக செயலி மூலமாகவும் விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. 2025ம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு இந்தியாவுக்கு 1,75,025 இடங்களை சவூதி அரேபியா ஒதுக்கியுள்ளது.
Similar News
News December 29, 2025
தங்கம் விலை மளமளவென குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை சர்வதேச சந்தையில் திடீரென இறங்குமுகம் கண்டு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $42(இந்திய மதிப்பில் ₹3,772) குறைந்து $4,441-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 29, 2025
புத்தாண்டு ராசிபலன் 2026: மிதுனம்

தசம கேந்திரமான 10-ம் இடத்தில் உள்ள சனி, ஜென்ம ராசியிலிருந்து தனஸ்தானத்திற்கு செல்லும் குரு, வெற்றி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் உள்ள கேது, தன் வீட்டை பார்க்கும் ராசியதிபதி புதன் என்ற அமைப்பில் தொடங்கும் இந்த புத்தாண்டு மிதுன ராசியினருக்கு பல மாற்றங்களை கொண்டு வரும் *திருமண தடைகள் அகலும் *குழந்தை பாக்கியம் தாமதமானவர்களுக்கு நல்ல செய்தி உண்டு *தொழிலில் இதுவரை பாடுபட்டதற்கான பலன்களை பெறுவீர்கள்
News December 29, 2025
பொங்கல் பரிசு பணம்.. அரசு தரப்பு வெளியிட்டது

<<18690697>>பொங்கல் பரிசுத் தொகுப்பு <<>>வரும் 10-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி கூறியிருந்தார். அத்துடன் ₹3,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்த நிலையில், வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. அதேநேரம் பொங்கல் பண்டிகை செலவுகளை கருதி, உரிமைத் தொகை ₹1,000-ஐ ஜன.9 (அ) 12-ம் தேதியே வங்கிக்கணக்கில் செலுத்த வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


