News August 14, 2024
மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை 7401703484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்
Similar News
News August 9, 2025
தி.மலை: சொட்டுநீர் பாசனம் 100% மானியம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சொட்டு நீர் பாசன அமைப்பதற்கு 100% மானியம் வழங்கப்படுமென திருவண்ணாமலை வட்டாரத் தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. விவசாயிகள் ஆதார் மற்றும் நில ஆவணங்களுடன் செங்கம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்காவில் தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு செய்யலாம். இத்தகவலை மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
தி.மலை: உங்க போனுக்கு தேவை இல்லாத மெசேஜ் வருதா?

தி.மலை மாவட்ட மக்களே உங்கள் செல்போனுக்கு பரிசு தொகை விழுந்துள்ளதாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். தங்களிடமிருந்து பணம் பறிக்கும் புதிய மோசடியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு தேவையில்லாத குறுஞ்செய்தி உங்கள் போனுக்கு வருகிறதா? உடனே சைபர் கிரைம் உதவி எண்: 1930க்கு அழைக்கவும். அல்லது <
News August 9, 2025
மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளகத்தில் பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இம்முகாமிற்கு வரும் பயிற்சியாளர்கள் www.apprenticeshipinida.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பாக ராஜ் தெரிவித்துள்ளார்.