News August 14, 2024
போதையில் உறங்கிய உதவி இயக்குநரால் அதிர்ச்சி

ஆலங்குளம் வேளாண்துறை அலுவலக பழைய கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி இயக்குநராக புளியங்குடியை சேர்ந்த அறிவழகன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று(ஆக.,13) இங்கு சென்ற விவசாயிகள், அறிவழகன் போதையில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரது பையில் மது பாட்டில்கள் இருந்ததை கண்டு முகம் சுழித்தபடி திரும்பினர்.
Similar News
News August 16, 2025
சுதந்திர போராட்ட தியாகிக்கு சால்வை அணிவித்து மரியாதை

தென்காசி அரசு பள்ளி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இடைகால் பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி காந்தன் பாரதிக்கு அரசு சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இதில் எஸ்.பி அரவிந்த், டிஆர்ஓ ஜெயச்சந்திரன் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News August 15, 2025
தென்காசி முன்னாள் MLAவின் விரக்தி

சங்கரன்கோவில் ex.MLA, முத்து செல்வியின் இன்றைய எக்ஸ் தளப்பதிவு; தொடர்ந்து புறக்கணிக்கும் தென்காசி வடக்கு மாவட்ட கழகத்திற்கு நன்றி; கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கும் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கும் எனக்கு அழைப்பு விடுக்காத மாவட்ட கழக நிர்வாகத்திற்கு நன்றி. நீங்கள் என்னை தொடர்ந்து புறக்கணித்தாலும் தலைவர் தளபதியார் வழியில் பயணிப்பேன் பணி செய்வேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
News August 15, 2025
குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து கொட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை ஓரத்தில் நின்று சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. தற்பொழுது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.