News August 14, 2024

20 துணை வட்டாட்சியர்கள் போராட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் துணை வட்டாட்சியர்கள் பலர், நீதிமன்றம் மற்றும் காவல் துறை பணிகளுக்கு பயிற்சிப் பெற்று 6 ஆண்டுகளாக வட்டாட்சியர் பதவிக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு வெளி மாவட்ட வட்டாட்சியர்களை நியமித்து வரப்படுகிறது. இதனை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து துணை வட்டாட்சியர்கள் 20 பேர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News November 10, 2025

காஞ்சியில் 635 பேர் ஆப்சென்ட்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வு மையம் சார்பில், மொத்தம் 3 தேர்வு மையங்களில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நேற்று (நவ.9) நடைபெற்றது. இந்த மூன்று மையங்களிலும் மொத்தம் 4,683 பேர் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. இதில், 4,048 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்ததாகவும், 635 பேர் ஆப்சென்ட் ஆனதாகவும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

News November 10, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் (நவம்பர். 09) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 9, 2025

காஞ்சிபுரம்: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!