News August 14, 2024
கெஜ்ரிவால் ஜாமின் மனு: SC இன்று விசாரணை

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு, SC-யில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் ED தொடுத்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு SC கடந்த ஜூலை மாதம் 12இல் இடைக்கால ஜாமின் அளித்தது. எனினும், சிபிஐ தனியே வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தது. இதனால் சிறையில் கெஜ்ரிவால் தொடர்ந்து உள்ளார். இதை எதிர்த்தும், ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.
Similar News
News October 20, 2025
நாளை விடுமுறையா? இல்லையா? CLARITY

தீபாவளி பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இன்று பண்டிகையை கொண்டாடிவிட்டு நாளைக்குள் ஊர் திரும்புவது சிரமம் என்பதால், நாளைக்கும் (அக்.21) சேர்த்து விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி -கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக வரும் சனிக்கிழமை (அக்.25) வேலைநாளாக இருக்கும்.
News October 20, 2025
TN-ல் நோட்டரி எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி

ஒரு ஆவணத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கையெழுத்திடும் அதிகாரம் பெற்றவர் நோட்டரி. மக்கள் தொகை மற்றும் அரசு அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், நோட்டரிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று மத்திய சட்ட அமைச்சகம், நோட்டரி விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி, TN 2,500-ல் இருந்து 3,500 நோட்டரிக்களாக அதிகரித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
BREAKING: கூட்டணி நிலைப்பாட்டை மாற்றிய விஜய்!

கரூர் சம்பவத்திற்கு பிறகு, விஜய் தனது கூட்டணி நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். ‘திமுக எதிர்ப்பு’ என்ற ஒற்றை குறிக்கோளை முன்னிறுத்தி, காங்கிரஸ், விசிகவை இழுக்க, தவெக நிர்வாகிகளுக்கு விஜய் புதிய அசைன்மென்ட் கொடுத்துள்ளாராம். இதன் முதல் படியாக, கரூருக்கு வருகை தரவுள்ளதாக கூறப்படும் ராகுலை விஜய் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், விசிகவை இழுப்பதில் தான் சிக்கல் என்றும் கூறப்படுகிறது.