News August 14, 2024

புதுச்சேரி சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நினைவு பரிசு

image

அரசு கலை,பண்பாட்டுத்துறை சார்பில் கடற்கரை சாலை, காந்தி திடலில் இன்று நடைபெற்ற “ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி” மக்கள் இயக்கத்தை துணைநிலை ஆளுநர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். விழாவில், ஆண்டாள், சுப்பராயன் உள்ளிட்ட புதுச்சேரி சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஐந்து பேருக்கு துணைநிலை ஆளுநர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

Similar News

News August 18, 2025

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பது. மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவாற்றலும், செயல்திறனும் மிக்கவர். தேசத்தைத் தனது உயிராகப் போற்றுபவர்.” என கூறியுள்ளார்.

News August 18, 2025

புதுவை: உங்கள் Phone காணாமல் போனா No Tension!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>’சஞ்சார் சாத்தி’<<>> என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க. SHARE பண்ணுங்க!

News August 18, 2025

புதுச்சேரி: பெண்ணிடம் ரூ.1.08 லட்சம் மோசடி

image

தட்டாஞ் சாவடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அறிமுகமான சிலர், ஆன்லைனில் பகுதிநேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் எனக்கூறி, வாட்ஸ்ஆப் லிங்க் அனுப்பியுள்ளனர். அந்த லிங்க்கை கிளிக் செய்து, அதில் கூறியபடி ரூ.1.08 லட்சம் செலுத்தி டாஸ்குகளை முடித்துள்ளார். ஆனால், அதற்கான லாபமும், செலுத்திய பணத்தையும் திருப்பி தரவில்லை என கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!