News August 14, 2024

இராமநாதபுரம் – செகந்திராபாத் இடையே ரயில் சேவை நீட்டிப்பு

image

செகந்திராபாதில் இருந்து இராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி, சென்னை, நெல்லூர் வழியாக செகந்திராபாத் சென்றடைகிறது. இந்நிலையில், தற்போது பயணிகளின் வசதிக்காக வரும் 21ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News October 27, 2025

ராம்நாடு: கண்மாயில் விழுந்து முதியவர் உயிரிழப்பு

image

ராமநாதபுரம், பரமக்குடி அருகே எஸ்.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (75). இவர் ஜோதிட தொழில் பார்த்து வருகிறார். இவர் நேற்று கிராமத்தில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார். அப்போது நிலை தடுமாறி விழுந்த அவர் மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 27, 2025

ராமநாதபுரம்: குறைந்த விலையில் பைக், கார் வேண்டுமா?

image

இராமநாதபுரம் மாவட்­டம், சமூ­க­நல அலுவல­கத்தின் கீழ் இயங்கி வந்­த­ அரசு வாகனத்தை (அக், 28) அன்று­ பொ­துமக்­கள் முன்னி­லை­யில் பகிரங்­க­ பொது ஏலம் விடப்­ப­டும் எனத் தெரிவிக்­கப்­படுகிறது. வாக­னத்­தை­ ஏலத்­தில் எடுக்­க­விரும்புவர்கள் மாவட்ட ச­மூ­க­நல அலுவல­கத்தில் நடைபெறும், ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

News October 26, 2025

தாய்லாந்து அழகி போட்டிக்கு ராம்நாடு பெண் தேர்வு

image

முதுகுளுத்தூர் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் மகள் ஜோதிமலர் (28) பெங்களூரில் படித்து வருகிறார். மேலும், மாடலிங் செய்து வரும் அவர், வருகின்ற நவ – 28-ம் தேதி தாய்லாந்தில் ஹெரிடேஜ் அழகி போட்டிக்கு இந்திய நாடு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் இதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவதாகவும், இந்திய கலாச்சார விரிவுரைக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.

error: Content is protected !!