News August 14, 2024
ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் அறிவிப்பு?

ஜம்மு & காஷ்மீர் தேர்தல் தொடர்பான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. செப்., 30க்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் நேரில் ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு 4 முதல் 5 கட்டங்களாக நடைபெறும் என்றும், தேர்தல் தேதி சில வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 2014இல் கடைசியாக அங்கு தேர்தல் நடைபெற்றது.
Similar News
News November 4, 2025
Chat Gpt-ல் மருத்துவம், சட்ட ஆலோசனைகள் நிறுத்தம்

Chat Gpt-ஐ இனி கல்வி தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Chat Gpt மருத்துவம், சட்டம் மற்றும் நிதி சார்ந்தவற்றில் ஆலோசனைகளை வழங்காது என Open AI நிறுவனம் கூறியுள்ளது. Chat Gpt பயன்படுத்தி பலரும் மருத்துவரை நாடாமல் தாங்களாக சிகிச்சை எடுப்பது உயிருக்கு ஆபத்தாக மாறும் காரணத்தினால், Open AI நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
News November 4, 2025
விவசாயிகளுக்கு அதிக யூரியா தந்துள்ளோம்: மத்திய அரசு

காரீப் பருவத்திற்காக விவசாயிகளுக்கு போதுமான அளவு யூரியா, உரங்களை வழங்கியுள்ளதாக மத்திய அரசின் உரங்கள் துறை தெரிவித்துள்ளது. 185.39 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவை என கணக்கிட்ட நிலையில், 230.53 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு உறுதி செய்யப்பட்டு, 193.20 லட்சம் மெட்ரிக் டன் விற்கப்பட்டதாக கூறியுள்ளது. இது கடந்த ஆண்டில் பயன்படுத்தியதை விட 4.08 லட்சம் மெட்ரிக் டன் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 4, 2025
நவம்பர் 4: வரலாற்றில் இன்று

*1884–தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் பிறந்தநாள். *1897–தாவரவியலாளர் ஜானகி அம்மாள் பிறந்தநாள். *1967–எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பு. *1972–நடிகை தபூ பிறந்தநாள். *2012–சமையல் கலைஞர் ஜேக்கப் சகாயகுமார் அருணி மறைந்த நாள். *2022–தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் மறைந்த நாள்.


