News August 14, 2024
சுதந்திர தின விழாவிற்கு ஆட்சியர் அழைப்பு

நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் வைத்து ஆட்சியர் கொடியேற்றி அணிவகுப்பை ஏற்று விழாவில் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்க உள்ளார். இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News January 6, 2026
நெல்லையில் ஒருவர் அடித்துக் கொலை

நெல்லை சீவலப்பேரியை அடுத்த தோனி துறை பகுதியில் மார்ட்டின் என்பவர் இன்று அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சுடுகாட்டுப் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட பிரச்சனையில் மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த மார்ட்டின் தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது. சீவலப்பேரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
News January 6, 2026
நெல்லை சத்துணவு மையத்தில் வேலை! 10th தகுதி போதும்…

நெல்லை மாவட்டத்தில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 15 சமையல் உதவியாளர் பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். <
News January 6, 2026
நெல்லை: இன்று இங்கெல்லாம் மின்தடை

திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (ஜன.6) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பழையபேட்டை, காந்திநகர், குன்னத்தூர், பேட்டை, அபிஷேகப்பட்டி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வி.கே.புரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. SHARE


