News August 13, 2024
இரவு காவல்துறையின் அவசர கால எண்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 3, 2025
கோவில்பட்டி: திருக்கல்யாண திருவிழா நாளை துவக்கம்

கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை (4) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி திருவனந்தல் பூஜை போன்றவை நடைபெறுகிறது. அதன் பின்னர் கோவில் கொடி பட்டம் ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது.
News November 3, 2025
தூத்துக்குடி: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 70
3. சம்பளம்: ரூ.40,000-2,20,000
4. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
5. வயது வரம்பு: 18-45
6.கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
தூத்துக்குடியில் ரூ.11 கோடியில் சுற்றுலா மாளிகை

தூத்துக்குடி வளர்ந்து வரும் தொழில் நகரமாக மாறி வருவதால் கூடுதலாக அரசு சுற்றுலா மாளிகை ஒன்று கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி விமான நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மாளிகை கட்ட பொதுப்பணித்துறை திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


