News August 13, 2024
தினசரி பயன்படுத்தும் உணவுப் பொருளில் பிளாஸ்டிக்

நாம் தினசரி பயன்படுத்தும் சர்க்கரை மற்றும் உப்பில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற சுகாதார அமைப்பு 10 வகையான உப்புகள் மற்றும் 5 வகையான சர்க்கரையில் இந்த ஆய்வை மேற்கொண்டது. இதில் 0.1மி.மீ முதல் 0.5 மி.மீ வரை பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இயற்கை முறையில் தயாராகாத சர்க்கரையில் அதிக அளவு பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
Similar News
News March 6, 2026
கூட்டிக் கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

1 முதல் 9-க்குள் ஏதாவது ஒரு நம்பரை நினைத்துக் கொள்ளுங்கள். அதை 3-ஆல் பெருக்குங்கள். அதில் வரும் விடையோடு 3-ஐ கூட்டுங்கள். அந்த விடையை மீண்டும் மூன்றால் பெருக்குங்கள். இப்போது உங்களுக்கு ஒரு இரட்டை இலக்க எண் கிடைத்திருக்கும். அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். இப்போது, உங்களுக்கு கிடைத்திருக்கும் விடை 9. சரியாக இருந்தால் ஷேர் பண்ணுங்க.
News March 6, 2026
PM KISAN திட்டத்தின் தவணை ₹2,000.. வந்தாச்சு HAPPY NEWS

PM KISAN திட்டத்தின் 22-வது தவணையை (₹2,000) மார்ச் 13-ம் தேதி டெபாசிட் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் அசாமில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் PM மோடி, இதற்கான நிதியை விடுவிக்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக, pmkisan.gov.in இணையதளம் சென்று Know Your Status ஆப்சன் மூலம் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.
News March 6, 2026
LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு

வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ்க்கு(LPG) தட்டுப்பாடு வராமல் இருக்க LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. LPG-க்கு தேவையான அனைத்து எரிவாயுவையும் 3 அரசு நிறுவனங்களுக்கு (IOC, BPCL, HPCL) மட்டும் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. ஈரான் போர் சூழலால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ள நிலையில், அதை தடுக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


