News August 13, 2024
நீரஜ் சோப்ரா வைத்திருக்கும் கார்கள்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற பாக்., வீரர் அர்ஷத் நதீமுக்கு ₹50 லட்சம் (பாக். மதிப்பில்), சொகுசுகாரும் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா வைத்திருக்கும் கார்களை குறித்த தகவல்களை பகிர்ந்து இந்திய ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். Mahindra XUV 700, Range Rover, Mahindra Thar, Toyota Fortuner, Ford Mustang GT உள்ளிட்ட 5 சொகுசு கார்களை நீரஜ் வைத்துள்ளார்.
Similar News
News March 4, 2026
வங்கிக் கணக்கில் பணம்.. உடனே செக் பண்ணுங்க

PM KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 விரைவில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் பயனாளிகளின் விவரங்கள் மாறியிருந்தால் அடுத்த தவணையை பெற முடியாது. எனவே, உங்கள் விவசாய அடையாள அட்டையில் எண்ணில் உள்ள ஆதார் எண், புதிய வங்கிக் கணக்கு, மாற்றப்பட்ட முகவரி என ஏதேனும் மாறியிருக்கிறதா என செக் செய்யவும். மாற்றமிருப்பின், வேளாண் அலுவலகத்திற்குச் சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.
News March 4, 2026
ஈரானின் உயர் தலைவரே டார்கெட்: இஸ்ரேல் எச்சரிக்கை

ஈரானின் உயர் தலைவராக யார் வந்தாலும் அவரை காலி செய்வதுதான் எங்களது இலக்கு என இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார். இந்த பணியை முடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என இஸ்ரேல் படைக்கு நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரானின் உயர் தலைவராக கமேனியின் மகன் முஜ்தபா கமேனி பதவியேற்றுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
திருச்சி ரயில்வேயில் இந்தி பெயரை அகற்ற ஒப்புதல்

திருச்சி ரயில்வே நுழைவாயிலில் இந்தி பெயர் இடம்பெற்றதற்கு <<19295250>>CM ஸ்டாலின்<<>> உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திருச்சி ரயில்வே அலுவலகம் முன் திமுகவினர் போராட்டமும் நடத்தினர். இந்த விவகாரம் பெரும் பூதாகரமான நிலையில், இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். கல்வெட்டில் உள்ள இந்தி பெயர் உடனடியாக மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.


