News August 13, 2024
திருச்சியில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை தினத்தையொட்டி மைசூர் – காரைக்குடி இடையே சிறப்பு ரயில் பெங்களூரு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக, மைசூரில் இருந்து ஆகஸ்ட் 14 மற்றும் 17ஆம் தேதிகளிலும் இரவு 9.30க்கு புறப்படும் என்றும், மறு மார்க்கமாக காரைக்குடியிலிருந்து ஆகஸ்ட் 15 மற்றும் 18ஆம் தேதிகளிலும் காலை 9.10 க்கு புறப்படும் என்பதை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News March 19, 2026
திருச்சி மாவட்டத்தில் 155.8 மி.மீ மழை பதிவு!

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பொன்மலை பகுதியில் 25.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் மருங்காபுரி பகுதியில் 19.4 மி.மீ,, மணப்பாறை பகுதியில் 7 மி.மீ என மாவட்டம் முழுவதும் 155.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 19, 2026
திருச்சி: தேர்தல் பொது பார்வையாளர்கள் வருகை!

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்தால் பொது பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டுள்ளனர். இவர்களிடம் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 19, 2026
சுய உதவிக்குழு, NGO கணக்குகளை கண்காணிக்க உத்தரவு

சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் செயல்படும், மகளிர் சுய உதவிகுழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கணக்குகளில், வழக்கத்திற்கு மாறாக பணம் டெபாசிட் செய்யப்பட்டாலோ, திரும்ப எடுக்கப்பட்டாலோ அதனை கண்காணிக்க வேண்டும். அது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டுமென வங்கியாளர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.


