News August 13, 2024

BJP தொடர்ந்த வழக்கில் போலீசுக்கு உத்தரவு

image

பாஜக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட வழக்கில் காவல்துறை பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏந்தி பைக் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பாஜக வழக்கு தொடர்ந்தது. யார் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏந்திச் செல்லலாம் என கூறிய நீதிபதி, பேரணி செல்லும் இடங்களை அறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி, போலீஸ் பதிலளிக்க உத்தரவிட்டார்.

Similar News

News March 12, 2026

BIG NEWS: இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்!

image

ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதனை NDTV செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்தியாவின் Pushpak மற்றும் Parimal கப்பல்கள் ஹார்முஸை பாதுகாப்பாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்துக் கொண்டிருப்பதால், கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் பிரச்னை இருக்காது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. SHARE IT.

News March 12, 2026

FLASH: வெள்ளி விலை ₹10,000 குறைந்தது!

image

தங்கம் விலை <<19360302>>சவரனுக்கு ₹1,200<<>> சரிந்தது போலவே வெள்ளியும் கிலோவுக்கு ₹10,000 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹10 குறைந்து ₹290-க்கும், பார் வெள்ளி கிலோ ₹10,000 குறைந்து ₹2,90,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 4% சரிந்து 1 அவுன்ஸ் 84 டாலராக நீடிப்பதால், வெள்ளியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 12, 2026

மனைவியை காக்க வக்கில்ல.. விஜய் மீது அட்டாக்?

image

சினிமாவிலிருந்து வந்திருக்கிறேன் என சொல்பவர்கள், பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பார்த்துவருவதாக நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார். விஜய்யை மறைமுகமாக சாடிய அவர், கட்டிய மனைவியை காப்பாற்ற வக்கில்லாதவர் எல்லாம் பெண்களை காப்பாற்றுவாரா என கேட்டுள்ளார். மேலும், ஜெ., இருந்திருந்தால் கண்டவரெல்லாம் பேசும் நிலை வந்திருக்குமா எனவும், ஜெ., வழியை பின்பற்றும் தலைவரை அதிமுக பெற்றிருப்பதாகவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!