News August 13, 2024
கடலூர் ஆட்சியர் விழிப்புணர்வு

கடலூர் டவுன்ஹால் அருகே சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று தடுப்பு குறித்து ஆட்டோக்களில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News March 4, 2026
கடலூர்: விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைப்பு

கடலூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு சம்பா பருவத்திற்கு மாவட்டம் முழுவதும், 2 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 72 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 34 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூபாய் 436 கோடி வரவு வைக்கப்பட்டதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?.. APPLY

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 4, 2026
கடலூர்: தவாகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று 10-க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து கொண்டனர். இதையடுத்து விருதாச்சலம் நகர செயலாளர் இளையராஜா தலைமையில், புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நகர மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


