News August 13, 2024
சென்னை அரசு மருத்துவமனை சாதனை

சென்னை, இராயபுரத்தில் உள்ள RSRM அரசு மருத்துவமனை கடந்த பிப்ரவரி முதல் தாய் சேய் இறப்புகள் பூஜ்ஜியமாக பதிவாகி சாதனை படைத்துள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சுகாதாரத்துறையின் தொடர் முன்னெடுப்புகள் காரணமாக மருத்துவமனையில் தாய் இறப்பு விகிதத்தை குறைத்து பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது. 140 ஆண்டுகள் பழமையான இந்த மருத்துவமனையில் மாதம் 1,000 பிரசவங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 19, 2025
சென்னையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

சென்னையில் ரேபிஸ் தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 50,823 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெருநாய்கள், வளர்ப்பு நாய்கள் என அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ரேபிஸ் தடுப்பூசி குறித்து சென்னையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 19, 2025
சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த 2 நாட்களும் மொத்தம் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் 21ம் தேதி மகாளய அமாவாசை என்பதால் நாளை செ.20, 21ம் தேதிகளில் ராமேஸ்வரத்துக்கு, மீண்டும் சென்னை திரும்பும் பயணத்துக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என எஸ்இடிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News September 18, 2025
BREAKING: சென்னையில் பிரபல நடிகர் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இன்று (செ.18) உடல்நலக் குறைவால் காலமானார். படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்த அவர், துரைப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் முன்னதாக ஏற்பட்ட மஞ்சள் காமாலை காரணமாக உடல் பலவீனமடைந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.