News August 13, 2024
செந்தில் பாலாஜிக்கு நாளை ஜாமின் கிடைக்குமா?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், கீழமை நீதிமன்றம், சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தை அவர் நாடினார். அவரது மனுவை விசாரித்த, நீதிபதிகள் அபய் ஒகா, ஜார்ஜ் மஸி அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது.
Similar News
News March 8, 2026
இரண்டு நாளில் கூட்டணி உறுதியாகும்: வீரபாண்டியன்

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – சிபிஐ இடையிலான 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், மார்ச் 8,9-ம் தேதிக்குள் தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான முடிவு அறிவிக்கப்படும் என்றார். தற்போதைய அரசியல் சூழலில், பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதன்மையான கடமை என்றும், மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்யும் எனவும் தெரிவித்தார்.
News March 8, 2026
டி20 WC நிறைவு விழாவில் சர்வதேச பாப் பாடகர்!

அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானம் டி20 WC பைனலுக்கு தயார் நிலையில் உள்ளது. அதற்கு முன்னதாக நடைபெற இருக்கும் நிறைவு விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதன்படி 2 முறை கிராமி விருது வென்ற சர்வதேச பாப் நட்சத்திரம் ரிக்கி மார்ட்டினின் கச்சேரி நடைபெற உள்ளது. அவருடன் இந்தியாவின் பாப் பாடகர் சுக்பீர் மற்றும் புகழ்பெற்ற பாடகி ஃபால்குனி பதக்கும் இசையால் அரங்கில் தீ பற்ற வைக்க உள்ளனர்.
News March 8, 2026
சர்வதேச மகளிர் தினம் உருவானது எப்படி?

ஆண்டுதோறும் மகளிர் தினத்தில் வாழ்த்துகள் பறந்தாலும், அதன் பின்னால் உள்ள வலி, வரலாறு பலருக்கும் தெரிவதில்லை. 1908-ல் வாக்குரிமை, சம பணிநேரம் & சம ஊதியம் கேட்டு நியூயார்க்கில் பெண்கள் வீதியில் இறங்கி போராடினர். 1910-ல் ஜெர்மனியை சேர்ந்த கிளாரா ஜெட்கின் முன்மொழிந்ததன் பேரில், 1917-ல் ரஷ்ய பெண்கள் மார்ச் 8-ம் தேதி நடத்திய Peace and Bread போராட்டமே, பின்னாளில் உலக மகளிர் தினம் உருவாக காரணமானது.


