News August 13, 2024
பார்டர்-கவாஸ்கர் தொடரை இந்த அணி வெல்லும்: பாண்டிங்

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இத்தொடரை இந்தியா வென்ற நிலையில், இந்த முறை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என ஆஸி., முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஒரு போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
Similar News
News March 8, 2026
எல்லை பாதுகாப்பு பணிகளில் ரோபோ

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் எல்லை காவலுக்கான ரோபோக்கள் தயாரிக்கப்படும் என்று அம்மாநில CM தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவித்துள்ளார். -40°C வரையிலான கடும் குளிரிலும் இந்திய எல்லைகளை காவல் காக்கும் ரோபோக்கள் தயாரிக்கப்படும் என்றும், சீனாவுக்கு இணையாக இந்தியாவிலும் ரோபோக்களை உருவாக்குவோம் என்றும் கூறினார். மேலும், அடுத்த ஆண்டில் முதல் ரோபோ முன்மாதிரி உருவாக்கப்படும் என்றார்.
News March 8, 2026
நிதிஷ்குமாரின் பதவி பறிக்கப்பட்டதா? வானதி

நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதி EPS-க்கு ஏற்படும் என ஸ்டாலின் வைத்த விமர்சனத்துக்கு வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். ராஜ்யசபாவுக்கு செல்ல வேண்டும் என்பது நிதிஷின் சொந்த முடிவு என்றும், பிஹாரில் பாஜக அதிக MLA-க்கள் பெற்றும் 2 முறை அவரை முதல்வராக்கினோம் எனவும் தெரிவித்துள்ளார். பாஜக வந்துவிடும் என மக்களை ஸ்டாலின் பயமுறுத்த பார்க்கிறார், ஆனால் ஏற்கனெவே இங்கு பாஜக வந்துவிட்டது என கூறியுள்ளார்.
News March 8, 2026
ராசி பலன்கள் (08.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


