News August 13, 2024
யார் இந்த தேவநாதன் யாதவ்?

நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யார் இவர்? வின் டிவியின் நிறுவனரான இவர் யாதவ மகா சபையின் தலைவராகவும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவன தலைவராகவும் உள்ளார். பாஜக கூட்டணியில் 2016 ஆம் ஆண்டு திருவாடணை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 11,842 வாக்குகள் பெற்றார். 2024 மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு 1,95,788 ஓட்டுகள் பெற்றார்.
Similar News
News March 7, 2026
சிவகங்கை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

சிவகங்கை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள்<
News March 7, 2026
BREAKING: சிவகங்கை இளைஞருக்கு சாகும் வரை சிறை

கோவை விமான நிலையம் அருகே மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 3 பேருக்கும் சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
News March 7, 2026
BREAKING மானாமதுரையில் ரவுடி சுட்டுப்பிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கானூர் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த ரவுடி ஊர்க்காவலன் என்பவரைப் பிடிக்க போலீசார் சென்றனர். அப்போது, அவர் மானாமதுரை இன்ஸ்பெக்டரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தற்காப்பிற்காகவும், அவரைப் பிடிப்பதற்காகவும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் காயமடைந்த ரவுடி ஊர்க்காவலன் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


