News August 13, 2024

TNPSC புதிய தலைவர் எஸ்.கே.பிரபாகர்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) புதிய தலைவராக, S.K.பிரபாகர் IAS நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக இருக்கும் அவரை, தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் TNPSC தலைவராக நியமித்து ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். TNPSC தலைவராக 6 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார். குரூப் 1, 2, 2 ஏ, VAO போன்ற முக்கிய தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் TNPSC மூலம் நடத்தப்படுகிறது.

Similar News

News March 23, 2026

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

image

வல்லாரை கீரையை அரைத்து சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாக்கும் தன்மை கொண்டது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்த கூடியது. இதில் உள்ள இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. ரத்த சுத்தகரிப்பு, தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக உதவுகிறது.

News March 23, 2026

அட்லி இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா?

image

அல்லு அர்ஜூனை வைத்து அட்லி இயக்கும் படத்தில் அனுஷ்கா ஷர்மா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்காவை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்தில் ஏற்கெனவே தீபிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படக்குழுவினர் இதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 23, 2026

வரலாற்றில் இன்று

image

➤1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் தூக்கிலிடப்பட்டார்.
➤1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
➤1951 – தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்த தினம்.
➤1979 – தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் பிறந்த தினம்.
➤உலக வானிலை நாள் கடைபிடிக்கப்படுகிறது

error: Content is protected !!