News August 13, 2024

இந்தியாவுடன் நட்புறவு தொடரும்: வங்கதேசம்

image

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளித்திருந்தாலும், இந்தியாவுடனான நட்புறவு தொடரும் என்று வங்கதேச இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இதுகுறித்து பேசியிருக்கும் அந்நாட்டு வெளியுறவுத்துறை ஆலோசகர் தௌஹித் ஹுசைன், இந்தியாவுடனான உறவு பாதிக்காது என்றார்.

Similar News

News March 5, 2026

திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsapp-ல் பெறலாம்!

image

திருப்பதி கோயில் தரிசன டோக்கனை WhatsApp மூலம் ஈசியாக பெறலாம் தெரியுமா? Whatsapp-ல் ஆந்திர அரசு சேவை எண் ‘9552300009’ நம்பருக்கு ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள். சேவைகள் அடங்கிய மெசேஜ் வரும். அதில், TTD temple service-ஐ தேர்வு செய்து, தேதி & நேரத்தை தேர்வு செய்து டிக்கெட்டை புக் செய்யலாம். கட்டணத்தை செலுத்திய பிறகு, டிக்கெட் மெசேஜ் வந்துவிடும். இந்த பதிவை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 5, 2026

கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

image

கூட்டுறவு & நகைக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனிடையே, 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில், திமுக, அதிமுக தரப்பில் கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த முறை 5 சவரன் நகைக்கடனை திமுக தள்ளுபடி செய்தது.

News March 5, 2026

தவெகவுடன் கூட்டணி.. ராகுலை தடுத்தாரா கார்கே?

image

தவெகவுடன் கூட்டணி அமைத்தால் இளைஞர்களின் ஆதரவை பெறுவதோடு, TN-ல் காங்கிரஸை வலுப்படுத்தலாம் என ராகுல் காந்தி கணக்கிட்டாராம். ஆனால், தேர்தல் நேரத்தில் கூட்டணியை முறிக்க கூடாது; மத்தியில் பாஜக அரசை எதிர்கொள்ள திமுக MP-க்களின் பலமும் தேவை என ராகுலிடம் கார்கே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தவெக தனது வாக்குவங்கியை நிரூபித்தால், அடுத்த தேர்தலில் கூட்டணி குறித்து பார்க்கலாம் என கார்கே கூறினாராம்.

error: Content is protected !!