News August 13, 2024

காஞ்சிபுரம் வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உள்பட்ட வல்லம்-வடகால் சிப்காட் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.706.50 கோடி மதிப்பீட்டில் 18,720 படுக்கை வசதிகளுடன் கூடிய தொழிலாளர்கள் தங்கும் விடுதி மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் கட்டப்பட்டு வருகிறது. இதனை ஆக.17ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து திறந்து வைக்கிறார். உடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

Similar News

News March 8, 2026

காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

image

படப்பை அடுத்த கரசங்கால் பகுதியைச் சேர்ந்தவர் சாம்பசிவம்(65). இவர், கரசங்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று(மார்ச் 7) காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 7, 2026

காஞ்சிபுரத்தில் சம்பளப் பிரச்னையா?

image

காஞ்சிபுரம் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <>லிங்கிலோ <<>>(அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

News March 7, 2026

காஞ்சி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை eservice<>s.tnpolice.<<>>gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!