News August 13, 2024

நாளை கடைசி: LIC நிறுவனத்தில் 200 பணியிடங்கள்

image

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் நாடுமுழுவதும் காலியாக உள்ள 200 பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க நாளை (ஆக.14) கடைசி நாளாகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள 10 பணியிடங்கள் உள்ளன. ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் <>www.lichousing.com<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 14, 2026

விஜய் எடுக்கப்போகும் முடிவு.. என்ன நடக்கும்?

image

அதிமுக கூட்டணிக்கு தவெக செல்லும் என்பதே இன்றைய ஹாட் டாபிக். ஒருவேளை விஜய் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தால், தொடக்கம் முதலே கொள்கை எதிரி என கூறிவந்த பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு சென்றுவிட்டார் என பேச்சு எழும். செல்லவில்லையென்றால், திமுக, அதிமுக இரு கூட்டணிகளுக்கும் வாக்கு வங்கியில் பாதிப்பு உண்டாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News March 14, 2026

வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

image

தங்கத்தை போன்றே இன்று (மார்ச் 14) வெள்ளி விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் ₹10 குறைந்து ₹280-க்கும், 1 கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாள்களில் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

News March 14, 2026

பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குக

image

போர் பதற்றத்துக்கிடையே பலரும் கேன், டின்களில் பெட்ரோல், டீசலை வாங்கிச் சென்றனர். இதனையடுத்து, இவ்வாறு பாதுகாப்பின்றி எரிபொருள் வழங்கக்கூடாது என இந்திய ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியது. ஆனால் இதை வாடிக்கையாளர்களிடம் கூறினால், அவர்கள் ஊழியர்களை மிரட்டுவதாக பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர். எனவே, TN-ல் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி DGP-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.

error: Content is protected !!